அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள பிளஸ் 1 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை வரும் 26- ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் இ. வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடப்புக் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றுள்ளது. சில பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளில் சில இடங்கள் காலியாகவுள்ளன.
அந்த இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 26- ஆம் தேதி தொடங்குகிறது. 300 முதல் 499 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு, 26 ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், 201 முதல் 299 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு அன்றைய தினம் மதியம் 2 மணிக்கும், 175 முதல் 200 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு வரும் 27- ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், புதுச்சேரி குடியுரிமை இல்லாதவர்களுக்கு அன்றைய தினம் மதியம் 2 மணிக்கும் கலந்தாய்வு
நடக்கும்.
கதிர்காமம் அரசு பெண்கள் பள்ளியில் நடைபெறும் இக்கலந்தாய்வில் பங்கேற்க, மாணவர்கள் அசல் சான்றிதழ்களையும், சான்றிதழ் நகல்களையும் கொண்டு வர வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

